இரட்டையர் பட்டத்தை வென்ற பயஸ் கலப்பு இரட்டையர் இறுதியில் தோல்வி

நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் போட்டியின் இறுதியாட்டத்தில் பயஸ்-ரேடக் ஜோடி வெற்றி பெற்றது. இது பயஸுக்குக் கிடைத்த 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மேலும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தைத் தவிர தற்போது அத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்ளையும் வென்றுள்ளார் பயஸ்.
இந்த நிலையில் இன்று கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் லியாண்டர் பயஸ்-ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி மோதியது. இதில் லியாண்டர் வென்றால், மீண்டும் ஒரு சாதனைக்கு பயஸுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். கடந்த 1999ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின்போது இரட்டையர் மற்ஏறும் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார் பயஸ். தற்போதும் அதேபோன்ற ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், அது கிட்டாமல் போய் விட்டது.
இரட்டையர் போட்டியில் வென்ற பயஸ், கலப்பு இரட்டையர் பட்டத்தைத் தவற விட்டது. இறுதிப் போட்டியில், 3-6, 7-5 (3-10) ருமேனிய-அமெரிக்க ஜோடியான ஹோரியா டெக்காவ், பெத்தானி மாட்டேக்கிடம் தோல்வியுற்றது.
Story first published: Sunday, January 29, 2012, 15:33 [IST]
Other articles published on Jan 29, 2012


Click it and Unblock the Notifications