ஜப்பான் ஓபன் டென்னிஸ்-சானியா வெற்றி

உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஒசாகாவில் நடக்கிறது. இன்று நடந்த முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா, இஸ்ரோலின் ஷாகர் பியரை வென்றார்.
இதில் முதல் செட்டை சானியா 3-6 என பறிகொடுத்தார். ஆனால், மனம் தளராமல் போராடிய சானியா அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-4 என கைப்பற்றினார்.
இறுதியில் 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் அதில், உக்ரைன் வீராங்கனை விக்டோரியா குதுஜோவாவை சந்திக்கிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications