பிரெஞ்ச் ஓபன்-அரையிறுதியில் பெடரர், கஸ்னெட்சோவா

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்ஸ் வீரர் கெல் மான்பில்சை எதிர்கொண்டார். இதில் சூப்பராக விளையாடி பெடரர் 7-6, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினாவின் ஜூவன் மார்டின் டெல் பெட்ரோ 6-3, 6-4, 6-2 என ஸ்பெயினின் டாமி ராபர்டோவை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
செரினா தோல்வி...
பெண்கள் பிரிவில் நடந்து காலிறுதி போட்டியில் ஷ்யாவின் கஸ்னெட்சோவா, அமெரிக்காவின் செரினா வில்லியம்சை சந்தித்தார். இதில் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய கஸ்னெட்சோவா அதை 7-6 என வென்றார். அடுத்து செட்டை செரினா 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேற போவது யார் என்பதை நி்ர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் இரு வீராங்கனைகளும் கடுமையாக மோதி கொண்டனர். இறுதியில் கஸ்னெட்சோவா 7-5 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார். அவர் 7-6, 5-7, 7-5 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையரில் நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர் 6-1, 6-3 என ரூமேனியாவின் சொரனா கிற்ஸ்டியாவை வென்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications