சானியா: முதல் சுற்றில் வெற்றி; கால்இறுதிக்கு தகுதி

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தப் போட்டியில் விளையாடி வருகிறார்.
கடந்த வாரம் ஸ்டான்போர்டு போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய சானியா, அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்சில் தொடங்கி உள்ள ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
செர்பியாவின் ஜான்கோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் டினரா சபீனா, பெட்ரோவா, சுவிட்சர்லாந்தின் ஷிண்டர் ஆகிய முன்னணி வீராங்கனைகளும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.6 கோடியாகும்.
இந்த போட்டியில் தர வரிசையில் 16வது இடம் வகிக்கும் சானியா தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனை செக் குடியரசின் இவா ஹிர்டினோவாவை சந்தித்தார்.
6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சானியா வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
இரண்டாவசு சுற்றில் சானியா உக்ரைனின் போன்டரென்கோ அல்லது சீனாவின் மெங் யுவான் ஆகியோரில் ஒருவரை சந்திப்பார். இரண்டாவது சுற்றிலும் சானியா வெற்றி பெற்றால் அடுத்து அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை எதிர்கொள்ள நேரலாம்.
இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெதானி மெடக்குடன் சானியா இணைந்து விளையாடுகிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications