ஆசியாவின் நம்பர் ஒன் வீராங்கனை சானியா
டெல்லி: ஆசியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாகி புதிய சாதனை படைத்துள்ளார் சானியா மிர்ஸா.
டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு புதிய பெருமையைத் தேடிக் கொடுத்தவர் சானியா மிர்ஸா. தற்போது இன்னும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார் சானியா.
ஆசிய அளவில் முதல் நிலை வீராங்கனையாக சானியா மிர்ஸா உருவெடுத்துள்ளார். இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை சானியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியதே இதற்கு முக்கியக் காரணம். ஒற்றையர் பிரிவில் சானியா 3வது சுற்று வரை முன்னேறினார். 3வது சுற்றில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸிடம் போராடித் தோற்றார்.
இரட்டையர் பிரிவில் 3வது சுற்று வரை முன்னேறியிருந்தார் சானியா.
கலப்பு இரட்ைடயர் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இதன் மூலம் தர வரிசைப் பட்டியலில் அவர் 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் இதுவரை ஆசியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்து வந்த சீனாவின் நா லியை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார் சானியா.
நா லி தற்போது தர வரிசைப் பட்டியலில் 32வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
இரட்டையர் பிரிவில் சானியா தற்போது 5 இடங்கள் பின்னேறி 23வது இடத்திற்குப் போயுள்ளார். இதுவரை 18வது இடத்தில் இருந்தார் சானியா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
