ஆஸி. ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா, பூபதி ஜோடி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி முன்னேறியது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி, செக் குடியரசின் இவடா பெனிசோவா, லூகஸ் டவுகி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக விளையாடிய பூபதி, சானியா ஜோடி 6-4, 6-1 என்ற செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்...
பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் 6-3, 6-3 என்ற செட்களில் சுலோவேனியாவின் டேனியலா ஹன்டுசோவா, ஜப்பானின் அய் சுகியாமா ஜோடியை தோற்கடித்து கோப்பையை வென்றது.


Click it and Unblock the Notifications