ஆஸி. ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றது சானியா, பூபதி ஜோடி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரின் கலப்பு இரட்டையர் இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி, பிரான்சின் நாதலி டெச்சி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியை எதிர் கொண்டது.
இதில் அபாரமாக விளையாடிய பூபதி, சானியா ஜோடி 6-3, 6-1 என்ற செட்களில் வென்று கோப்பை கைப்பற்றியது.
இது கலப்பு இரட்டையரில் மகேஷ் பூபதி கைப்பற்றும் 7வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். சானியாவுக்கு இது முதல் கிரான்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications