விம்பிள்டன் மகளிர் இரட்டையர் - சானியா தோல்வி

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில், இந்தியாவின் சானியா மிர்ஸா, ஏற்கனவே ஒற்றையர் போட்டியில் வெளியேறி விட்டார்.
இந்த நிலையில் நேற்று மகளிர் இரட்டையர் 2வது சுற்று ஆட்டத்தில் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்தவர் தைபேயைச் சேர்ந்த சியா ஜங் சுவாங் ஆவார்.
இருவரும் இணைந்து, அல்லா குத்யாவ்த்சேவா - மோனிகா நிகலஸ்கு ஜோடியை சந்தித்தனர்.
இந்தப் போட்டியில், 2-6, 3-6 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி தோல்வியுற்றது.
தற்போது சானியா கலப்பு இரட்டையர் போட்டியில் மட்டும் மிஞ்சியிருக்கிறார். மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆடி வரும் சானியா 2வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications