இரட்டையர் பிரிவில் சானியா முன்னேற்றம்!
![]() |
| Click here for more images |
20 வயதாகும் சானியா மிர்ஸா, வயிற்று காயம் காரணமாக சமீப காலமாக விளையாடாமல் உள்ளார். இதனால் ஒற்றையர் பிரிவில் அவருக்கு சற்று தளர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் விரைவில் ஹாப்மேன் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார். இதில் இரட்டையர் பிரிவில் அவர் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து ஆடவுள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஏடிபி ரேங்கிங் பட்டியலில் சானியாவுக்கு இரட்டையர் பிரிவில் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டு 19வது ரேங்க்கிலிருந்து 18வது ரேங்குக்கு முன்னேறியுள்ளது.
இரட்டையர் பிரிவில் தொடர்ந்து நான்கு வாரங்களாக அவர் 32வது இடத்தில் இருக்கிறார்.
போபண்ணா 261வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 271வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த சுனில் குமார் சிப்பாயா 561வது இடத்தில் உள்ளார்.
லியாண்டர் பயஸ், 13வது இடத்திலும், மகேஷ் பூபதி 21வது இடத்திலும் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
