விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு சானியா தகுதி
விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் சானியா மிர்ஸா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த சானியா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை வெற்றி முத்திரையுடன் தொடங்கியுள்ளார்.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில், கொலம்பியாவின் கதலீனா கஸ்டனோவை சானியா சந்தித்தார். இப்போட்டியில் முதல் செட்டை டை பிரேக்கர் மூலம் வென்றார். ஆனால் அடுத்த சுற்றை இழந்தார். இருப்பினும் 3வது சுற்றில் சிறப்பாக ஆடி 7-6(3), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தர வரிசைப் பட்டியலில் 32வது இடத்தில் இருக்கும் சானியா, நேற்று சற்று வலியுடன்தான் ஆடினார். இருப்பினும் ஆட்டத்திற்கு இடையே இருமுறை தோள்பட்டையில் மருந்து தடவிக் கொண்டு தொடர்ந்து ஆடி வெற்றி பெற்றார்.
2வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை மரியா ஜோஸ் மார்ட்டினஸை சந்திக்கிறார் சானியா. இதில் அவர் வெற்றி பெற்றால், முதல் முறையாக விம்பிள்டன் ஒற்றையர் ஆட்டத்தின் 3வது சுற்றுக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications