ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா அதிர்ச்சி தோல்வி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா தோல்வியடைந்தார்.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சானியா ஏமாற்றினார். 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெண்கள் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில் செர்பியாவின் இவானோவிச், ரஷ்யாவின் டினரா சபினா ஜான்கோவிச் ஆகியோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
சானியா அடுத்ததாக கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மகேஸ் பூபதியுடனும், இரட்டையரில் அமெரிக்காவின் வெனியா கிங்குடனும் ஜோடி சேர்ந்து விளையாட இருக்கிறார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications