தர வரிசையில் ஒரு ரேங்க் குறைந்த சானியா
டெல்லி:
மகளிர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்ஸா ஒரு படி இறங்கி 30வது இடத்தில் இருக்கிறார்.
![]() |
| Click here for more images |
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த கிரெம்ளின் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா முதல் ரவுண்டிலேயே தோற்று வெளியேறினார். இதனால் தர வரிசைப் பட்டியலில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒற்றையர் பிரிவில் இதுவரை 29வது இடத்தில் இருந்து வந்த அவர் தற்போது 30வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இருப்பினும் இரட்டையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 20வது இடத்திலிருந்து 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் பிரவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா 260வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 270வது இடத்திலும் உள்ளனர்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 17வது இடத்திலும், மகேஷ் பூபதி 21வது இடத்திலும் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
