சானியாவுக்கு சரிவு
![]() |
| Click here for more images |
சானியா மிர்சா கடந்த மாதம் மகளிர் ஒற்றையர் தர வரிசையில் 28வது இடத்தில் இருந்தார். சமீபத்தில் நடந்த கிரெம்ளின் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியதால் 29வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அதே போன்று ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் வயிற்றுவலி காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், தற்போது சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் 32வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் இரட்டையர் தரவரிசையில் தொடர்ந்து 19வது இடத்தை சானியா தக்க வைத்துள்ளார். இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ்பூபதி இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 17வது மற்றும் 21வது இடத்தில் இருக்கிறார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
