விம்பிள்டன்-சானியா ஜோடி வெற்றி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் லண்டனில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தைபேவின் ஜியா ஜங் ஜோடி, அமெரிக்காவின் ஜில் கிரைபாஸ் மற்றும் கார்லி குலிக்சன் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 6-4 எனவும், அடுத்து செட்டை 6-2 எனவும் வென்றது. இறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
பயஸ் ஜோடி தோல்வி...
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் டவுகி ஜோடி 4-6, 4-6, 3-6 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளேக், மார்டி பிஸ் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
மூன்றாவது சுற்றில் இவானோவிச்...
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினா, ஸ்வெட்லானா கஸ்னெட்சோவா, செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், அனா இவானோவிச் ஆகியோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications