Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன் பெண்கள் இரட்டையர் அரை இறுதியில் நுழைந்தது சானியா ஜோடி!

Elena Vesnina and Sania
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின், மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி நுழைந்துள்ளது.

இந்திய ரஷ்ய ஜோடி காலிறுதிப் போட்டியில், 2வது நிலை வீராங்கனைகளான லீஸல் ஹ்யூபர், லிசா ரேமன்ட் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது.

மூன்று மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில், 6-3, 5-7, 7-6 (6) என்ற செட் கணக்கில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்றது.

ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் சானியா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு அவர் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அப்போதும் அவர் எலினாவுடன்தான் விளையாடினார் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் அந்த அரை இறுதிப் போட்டியில் சானியா-எலினா ஜோடி தோல்வியடைந்தது.

அரை இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா மற்றும் வெரா ஸ்வோனீராவா ஜோடியுடன் மோதவுள்ளது.
Story first published: Tuesday, January 24, 2012, 14:58 [IST]
Other articles published on Jan 24, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+