பர்மிங்ஹாம் ஓபன்-3வது சுற்றில் சானியா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் முடிந்த நிலையில் அடுத்ததாக வரும் 22ம் தேதி விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் துவங்குகிறது.
இதையடுத்து பிரெஞ்ச் ஓபனில் கோட்டைவிட்ட பலரும் விம்பிள்டனை கைப்பற்ற கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
விம்பிள்டன் தொடருக்கான பயிற்சி தொடர்களாக கருதப்படும் பர்மிங்ஹாம் ஓபன் தொடர் தற்போது நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இங்கிலாந்தின் அன்னே கியோதாங்கை எதிர் கொண்டார்.
இதில் சானியா மிர்சா 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications