பர்மிங்ஹாம் ஓபன்-அரையிறுதிக்கு சானியா முன்னேற்றம்
பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் பர்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஹங்கேரியின் மெலின்டா ஜிங்கை சந்தித்தார்.
இதில் சூப்பராக விளையாடிய சானியா முதல் செட்டை 6-1 என வென்றார். இரண்டாவது செட்டிலும் சூப்பராக செயல்பட்ட சானியா 7-6 என அதை கைப்பற்றினர். இறுதியில் 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் சீனாவின் லீ னா 6-3, 7-6 என்ற செட்களில் சுவிட்சர்லாந்தின் ஸ்டீபனி வோகலேவை வென்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications