வான்கூவர் ஓபன் டென்னிஸ் -பைனலில் சானியா
வான்கூவர்: வான்கூவர் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனை சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார்.
கனடாவின் வான்கூவர் நகரில் டபிள்யூ.டி.ஏ டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, கனடாவின் ஷரோன் பிக்மேனை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட சானியா கடுமையாக போராடிய போதும் முதல் செட்டை 6-7 என பறிகொடுத்தார். ஆனால், அடுத்தடுத்த செட்களில் சுதாரித்து விளையாடிய சானியா அதை 6-3, 6-2 என கைப்பற்றினார். இறுதியில் 6-7, 6-3, 6-2 என்ற செட்களில் வென்றார்.
மற்றொரு அரையிறுதியில் கனடாவின் ஸ்டீபனி டுபாய்ஸ் 6-2, 4-6, 6-3 என அமெரிக்காவின் மஷோனா வாஷிங்டனை வீழ்த்தினார். பைனலில் சானியா, ஸ்டீபனி மோதுகின்றனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications