2008ல் சாதிப்பேன்-சானியா மிர்சா
பெர்த்: 2008ம் ஆண்டில் அனைவரும் ஆச்சரியப்படும்படி சாதிப்பேன் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கூறியுள்ளார்.
இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சமீபகாலமாக சர்வதேச டென்னிசில் சொல்லும்படியாக ஜொலிக்கவில்லை. அவர் காரணம் சொல்வதற்கு ஏற்றாற் போல கை, மணிக்கட்டு, மூட்டு, வயிற்றுப் பகுதி ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் அவருக்கு வலது மூட்டில் அறுவை சிகிச்சையும் நடந்தது.
தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் சானியா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நான் இப்போது முழு தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். இந்த ஆண்டு (2007) அடிக்கடி எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் என்னால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது. வரும் ஆண்டில் (2008) எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
2008ம் ஆண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பது எனது திட்டம். மிகவும் கவனத்துடன் விளையாடி தரவரிசையிலும் முன்னேறுவேன்.
கடந்த வருடம் காயம் காரணமாக சற்று விலகி இருந்தாலும் பங்கேற்பு ஆட்டங்களில் ஓரளவு நன்றாக ஆடினேன். எனது ஆட்டத்தில் முழு திருப்தி உள்ளது என்றார் சானியா மிர்ஸா.
இனி வரும் ஆண்டில் ஏதாவது ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல சானியாவை புத்தாண்டுடன் சேர்த்து வாழ்த்துவோம்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:34 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications