சானியாவுக்கு 'வைல்ட் கார்ட'
துபாய்: துபாயில் நடைபெறவுள்ள பெர்க்ளேஸ், துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட இந்தியாவின் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு 'வைல்ட் கார்ட்' (போட்டியில் பங்கேற்க போதிய பாயிண்டுகள் இல்லாவிட்டாலும் விளையாட அனுமதிப்பது) அனுமதி கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற சானியா மிர்ஸா, முழங்கால் காயம் காரணமாக முதல் சுற்றிலேயே வெளியேறினார். இந்த நிலையில் துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இங்குதான் அவர் கடந்த 2005ம் ஆண்டு உலகின் 7ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குசென்சோவாவை வீழ்த்தி சாதனை படைத்தார்.
துபாய் ஓபன் டென்னிஸ், சானியாவுக்கு சற்றே ராசியான களமாகும். இந்த நிலையில் மீண்டும் அவர் திரும்பியிருப்பது சானியாவின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சானியா கூறுகையில், 2007ம் ஆண்டு கடினமானதாக இருந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் விளையாட வருவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் என்னால் விளையாட முடிந்தது, சில வெற்றிகளையும் பெற முடிந்தது. அது அதிர்ஷ்டம்தான்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு கோடை காலம் எனக்கு நல்லதாக இருந்தது. நன்றாக விளையாடினேன். கடினமான வருடமாக இருந்தாலும், மோசமானதாக இல்லை. நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டும் அப்படி நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கடந்த கால அனுபவங்களிலிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். டென்னிஸ் வீராங்கனையாகவும், பெர்சனாலிட்டியிலும் பல மடங்கு மேம்பட்டுள்ளேன்.
என்னைச் சுற்றி மீடியாக்கள் வருவதை நான் பெரிய தடையாக நினைக்கவில்லை. எனக்கு முன்னால் மைக்கை வைத்து கேள்விகள் கேட்டால், அது பிடிக்கிறதோ, இல்லையோ வழக்கம் போலவே நான் பேசுகிறேன், பதில் தருகிறேன். அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்கிறேன் என்றார் சானியா.
இந்த போட்டித் தொடரில் ஜஸ்டின் ஹெனின், மரியா ஷரபோவா, நடியா பெட்ரோவா, ஜெலனீ ஜாங்கோவிக், அமெலி மரீஸ்மோவா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications