ஜூரிச் ஓபன்-மிச்செலாவிடம் சானியா தோல்வி
சுவிட்சர்லாந்து:
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஜூரிச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியாமிர்ஸா முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.
![]() |
| Click here for more images |
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் நகரில் ஜூரிச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா, நெதர்லாந்தின் மிச்செலா கிராஜிசெக்கை எதிர்த்து மோதினார்.
இறுதியில் சானியாமிர்ஸா 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவினார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 28ம் இடத்தில் இருந்த சானியா, சமீபத்தில் நடைபெற்ற கிரெம்ளின் ஓபனின் மகளிர் ஒற்றையர் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்ததால் உலக தரவரிசையில் 29 இடத்திற்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
