Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சானியா நல்ல வாய்ப்பை தவற விட்டுள்ளார்: விஜய் அமிர்தராஜ்

Sania Mirza
டெல்லி: பெங்களூர் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடியிருந்தால் முன்னணி வீராங்கனைகள் சிலரை தோற்கடித்து அதன் மூலம் தர வரிசைப் பட்டியலிலும், புகழேணியிலும் மேலும் சில படிகள் உயரும் நல்ல வாய்ப்பு சானியாவுக்கு இருந்தது. அதை அவர் தவற விட்டுள்ளார் என்று முன்னாள் இந்திய டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உள்ளூரில் விளையாடுவது என்பது எந்த விளையாட்டு வீரர், வீராங்கனைக்கும் மிகவும் சவுகரியமான ஒன்று. பல வெற்றிகளை இதில் பெற முடியும்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் சானியா நல்ல பார்மில் இருந்தார். பெங்களூர் ஓபன் போட்டியில் அவர் விளையாடியிருந்தால் நிச்சயம் பெரிய வெற்றியை அவர் பெற்றிருக்க முடியும்.

சில முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. ஆனால் அதை சானியா தவற விட்டு விட்டார்.

இருப்பினும் சானியாவை யாரும் வற்புறுத்த முடியாது. எது நல்லது என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஆனால் சானியா எடுத்த முடிவும், அதற்கான காரணமும் விநோதமாக உள்ளது. சானியா மாதிரியான திறமையுள்ள வீராங்கனையால் டாப் 20க்குள் எளிதில் நுழைய முடியும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதும் அவசியமாகும். அதற்கு கிடைக்கிற வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

சானியா எப்போது டாப் 20 பட்டியலில் நுழைவார் என இந்தியா காத்திருக்க முடியாது. அவர்தான் அதற்கான வேகத்தைக் கூட்ட வேண்டும் என்றார் விஜய் அமிர்தராஜ்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+