வான்கூவர் டென்னி்ஸ்-பைனலில் சானியா ஏமாற்றம்
வான்கூவர்: வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்து பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
கனடாவின் வான்கூவர் நகரில் ஜடிஎப் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சானியா மிர்சா, கனடாவின் ஸ்டீபனி டுபாய்சை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பாக விளையாடிய சானியா முதல் செட்டை 6-1 என எளிதாக வென்றார். இதையடுத்து அவர் எளிதாக பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனடா வீராங்கனை சுதாரித்து கொண்டார். அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4, 6-4 என வென்று, சானியாவின் வெற்றி நம்பிக்கையை தகர்த்தார்.
இறுதியில் சானியா 6-1, 4-6, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இறுதிப் போட்டி வரை முன்னேறிய சானியாவுக்கு சுமார் ரூ. 3 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications