For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரட்டையர் 2வது சுற்றில் சானியா வெற்றி - கலப்பு இரட்டையரில் தோல்வி!

By Staff

லண்டன்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்ஸா ஜோடி வெற்றி பெற்றது. அதேசமயம், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - மகேஷ் பூபதி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது

மகளிர் இரட்டையர் பிரிவு 2வதுசுற்று ஆட்டத்தில் சானியா - அமெரிக்காவின் பெத்தானி மேட்டக் ஜோடி, ரஷ்ய-இத்தாலிய ஜோடியான மரியா கிரிலென்கோ-பிளேவியா பென்னட்டாவை எதிர்கொண்டது.

இப்போட்டியில், மரியா ஜோடியை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி எளிதில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது.

இரட்டையர் பிரிவில் வென்ற சானியா, கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியை சந்தித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா - மகேஷ் பூபதி ஜோடி, ரஷ்யாவின் இகர் ஆன்ட்ரீவ் - மரியா கிரிலென்கோ ஜோடியை எதிர்கொண்டது.

இந்திய ஜோடியை, ரஷ்ய ஜோடி 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.

மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், லியாண்டர் பயஸ் - ஸ்டப்ஸ் ஜோடி, ஸ்வீடன்-ஆஸ்திரேலிய ஜோடியான ஜோனஸ் போர்க்மென் - அலிசியா மோலிக் ஜோடியும் மோதின.

இதில் பயஸ் ஜோடி 3-6, 6-3, 3-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+