ஆஸ்திரேலிய ஓபன்: 3வது சுற்றில் சானியா-வீனஸை சந்திக்கிறார்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா முன்னேறினார். இதில் வீனஸ் வில்லியம்ஸை சானியா சந்திக்கவுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தின் 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் டிமியா பக்சின்ஸ்கியை சானியா சந்தித்தார்.
கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில் சானியா 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் டிமியாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
அடுத்த சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சானியா சந்திக்கிறார். வீனஸ், தனது 2வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கெமிலி பின்-ஐ வீழ்த்தினார்.
கடந்த ஆண்டு முழுவதும் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்ட சானியாவுக்கு இந்த ஆண்டு சற்றே திருப்திகரமாக தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய ஒப்பனுக்கு முன்பு நடந்த ஹோப்மன் கோப்பைப் போட்டியில் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறினார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
