பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றது சானியா ஜோடி

பிரிஸ்பேனில் நடந்த இறுதிப் போட்டியில், சானியா -பெத்தானி ஜோடி, செக்- ஜெர்மன் ஜோடியான அன்னா லெனா, குவிடா பெஸ்ஸக் ஜோடியா 4-6, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போட்டி நீடித்தது. இரு தரப்பும் கடுமையாகப் போராடின.இருப்பினும், சானியா-பெத்தானி ஜோடி விடாப்பிடியாக விளையாடி வெற்றியைப் பறித்தது.
ஜனவரி 14ம் தேதி ஆஸ்திரேலிய ஒபன் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சானியா, பெத்தானிக்கு இந்த வெற்றி தெம்பூட்டும் விதமாக அமைந்தது.
Story first published: Sunday, January 6, 2013, 11:33 [IST]
Other articles published on Jan 6, 2013


Click it and Unblock the Notifications