Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஆண்டு 20வது ரேங்க்கை பிடிப்பேன்: சானியா



Sania Mirz
Click here for more images
சென்னை: அடுத்த ஆண்டில் உலக அளவில் 20வது இடத்திற்கு முன்னேறுவேன் என்று இளம் டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா கூறியுள்ளார்.

சானியா மிர்ஸா நேற்று சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஆண்டு வயிற்று காயம் காரணமாக சரியாக விளையாட முடியாமல் போய் விட்டது. ஆனால் அடுத்த ஆண்டு சீசனில், உலக மகளிர் தர வரிசைப் பட்டியலில் 20வது ரேங்கைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

சிறப்பாகவே விளையாடி வருகிறேன். அடுத்த சீசனில் மேலும் சிறப்பாக விளையாடி 20வது ரேங்கைப் பிடிக்க லட்சியம் பூண்டுள்ளேன்

மற்ற விளையாட்டுக்களைப் போல டென்னிஸ் போட்டியிலும் மேட்ச் பிக்சிங் இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது. ஆனால் மகளிர் டென்னிஸில் இது இல்லை என்றே நினைக்கிறேன். மேட்ச் பிக்சிங் டென்னிஸ் விளையாட்டுக்கு நல்லதல்ல.

மகளிர் டென்னிஸைப் பொறுத்தவரை ஜஸ்டின்ஹெனின் வீழ்த்த முடியாத ஒரு வீராங்கனையாக இருக்கிறார். அவரை வெல்வது மிக மிக கடினமான விஷயம். அவரை பொம்பளை ரோஜர் பெடரர் என்றே கூறலாம். ஆடவர் பிரிவில் எப்படி பெடரர் வீழ்த்த முடியாத நபராக இருக்கிறாரோ, அதேபோல மகளிர் பிரிவில் ஹெனின்.

எனது முழங்காலில் ஏற்பட்ட காயம் சாதாரணமானதுதான். திடீரென நடந்து விட்ட விபத்து அது. சர்வீஸ் போடும்போது லேசான சிரமம் தருகிறது. இதுபோன்ற சிறு சிறு காயங்கள் ஏற்படுவது விளையாட்டில் சகஜமானதுதான். இதைத் தவிர்க்க முடியாது. இதைத் தாண்டி வெற்றி பெறுவதை மட்டுமே லட்சியமாக கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார் சானியா.

Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+