யு.எஸ். ஓபன் டென்னிஸ்.. சீனாவின் ஜி ஜியாங்குடன் இணைகிறார் சானியா மிர்சா!
டெல்லி: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சீனாவின் ஜி ஜியாங்குடன் ஜோடியாக விளையாட உள்ளார்.
நடப்பாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாக இருப்பது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிதான். விம்பிள்டன் போட்டியில் அமெரிக்காவில் லிஜெலுடன் சானியா மிர்சா இணைந்து விளையாடினார்.

தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸில் சீனாவின் ஜியா ஜியாங்குடன் இணைந்து விளையாட இருக்கிறார் சானியா மிர்சா. இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த காலங்களில் இருவரும் ஒற்றையர் பிரிவுகளில் எதிரெதிராக விளையாடி இருக்கிறோம்.
விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர் அவர். நான் ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்ல தவறியிருந்தேன். இருவரும் இணைந்து இம்முறை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
Story first published: Tuesday, July 23, 2013, 17:54 [IST]
Other articles published on Jul 23, 2013


Click it and Unblock the Notifications