ஒலிம்பிக் டென்னிஸ்: வெளிச்சமின்மையால் கலப்பு இரட்டையரில் பயஸ்-சானியா போட்டி தள்ளிவைப்பு

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா மிர்சா ஜோடி, பெலாரஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி, விக்டோரியா அசாரென்கா ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டியில் இரு ஜோடியினர் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் 5-5 என்ற சம புள்ளிகளை பெற்றனர். ஆனால் 47 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பெலாரஸ் ஜோடி முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2வது செட்டிலும் இரு ஜோடிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. பெலாரஸ் ஜோடி 2வது செட்டில் 2-3 என்ற முன்னிலை பெற்ற நிலையில் ஆடுகளத்தின் வெளிச்சம் பாதிக்கப்பட்டது. இதனால் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாமல், நடுவர்களால் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
Story first published: Saturday, August 4, 2012, 11:42 [IST]
Other articles published on Aug 4, 2012


Click it and Unblock the Notifications