சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ்: சானியா விலகல்
நியூயார்க்: அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறும் சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக சானியா மிர்ஸா விலகிவிட்டார்.
சமீபத்தில் முடிந்த பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா விளையாடியபோது அவருக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து இன்னும் அவர் முழுமையாக குணமாகவில்லை.
இந்த நிலையில் சோனி எரிக்சன் ஓபன் போட்டியில் அவர் பங்கேற்றார். முதல் சுற்றில் அவர் 'பை' வாங்கி 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
2வது சுற்றில் அவர் ஜெர்மனியின் சபீன் லிசிக்கியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் சானியா.
--
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications