பர்மிங்ஹாம் ஓபன்-காலிறுதிக்கு சானியா, ஷரபோவா தகுதி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 22ம் தேதி துவங்குகிறது. இதற்கும முன்னதாக தற்போது பர்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இத்தொடரில் நேற்று நடந்து மூன்றாவது சுற்றுப்போட்டியில் இந்தியவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுல்சென்கோவாவை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய சானியா முதல் செட்டை 7-6 என வென்றார். இரண்டாவது செட்டில் சுதாரித்து கொண்ட ரஷ்ய வீராங்கனை அதை 6-3 என வென்று பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து காலிறுதி வாய்ப்பு யாருக்கு என்பதை உறுதி செய்யும் மூன்றாவது செட்டில் அசத்தலாக விளையாடிய சானியா அதை 6-2 என எளிதாக வென்றார். இறுதியில் 7-6, 3-6, 6-2 என்ற செட்களில் வென்று சானியா காலிறுதிக்கு முன்னேறினார். இவர் காலிறுதியில் ஹங்கேரியின் மெலின்டா ஜிங்கை எதிர்கொள்கிறார்.
மற்றொரு மூன்றாவது சுற்றுப்போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-1, 6-3 என இத்தாலி வீராங்கனை பிரான்சிஸ்கோ சியாவோனை வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications