டாப் 20 பட்டியலில் லியாண்டர்-பூபதி: சானியாவுக்கு சறுக்கல்
டெல்லி: ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் டாப் 20 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர்.
ஏடிபி உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ் 15வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதேபோல மகேஷ் பூபதி 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சானியாவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. 3 ரேங்குகள் குறைந்து 32வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் சானியா மிர்ஸா.
தர வரிசைப் பட்டியலில் 29வது இடத்தில் இருந்தார் சானியா. இதன் மூலம் ஆசியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் மாறினார்.
இந்த நிலையில் 3 இடங்கள் சறுக்கி தற்போது 32வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார் சானியா.
அதேசமயம், இரட்டையர் பிரிவில் 23வது இடத்தில் தொடர்ந்து அவர் நீடிக்கிறார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவின் சுனிதா ராவ் 182வது இடத்தில் இருக்கிறார். இரட்டையர் பிரிவில் 126வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
நாளை தொடங்கும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்கிறார். இதில் பெறும் வெற்றிகளைப் பொறுத்து அவரது தர வரிசையில் மாறுதல் ஏற்படலாம்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications