Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சானியா 'ஸ்டெடி' - பயஸுக்கு உயர்வு!

Sania Mirza
Click here for more images
டெல்லி: உலக மகளிர் சங்க டென்னிஸ் ரேங்கிங் பட்டியலில் சானியா மிர்ஸாவுக்கு சறுக்கல் எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து 32வது இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் லியாண்டர் பயஸ் நான்கு ரேங்குகள் உயர்ந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக சானியா மிர்ஸாக கடந்த சில வாரங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவரது ரேங்கிகங் வரிசையில் பாதிப்பு ஏதும் இல்லை. தொடர்ந்து அவர் 32வது ரேங்க்கில் உள்ளார்.

இரட்டையர் பிரிவில் சானியா 19வது இடத்தில் இருக்கிறார். விரைவில் ஹோப்மன் கோப்பை போட்டியில் சானியா பங்கேற்கவுள்ளார். இப்போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணாவுடன் ஜோடி சேருகிறார் சானியா.

ரோஹன் போபண்ணா, ஒற்றையர் பிரிவில் 261வது இடத்தில் உள்ளார். இன்னொரு இந்திய வீரரான பிரகாஷ் அமிர்தராஜ் 271வது இடத்தில் இருக்கிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் 4 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார். மகேஷ் பூபதி 21வது இடத்தில் இருக்கிறார். ரோஹன் போபண்ணா 79வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+