சேலை மாற்ற சானியா, சுனிதாவுக்கு நேரம் இல்லை -கல்மாடி
பெய்ஜிங்: சேலை மாற்றுவதற்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால்தான் சானியா மிர்ஸாவும், சுனிதா ராவும், ஒலிம்பிக் அணிவகுப்பின்போது சேலையில் வரவில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி விளக்கியுள்ளார்.
நேற்று இரவு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பின்போது இந்திய டென்னிஸ் வீராங்கனைகள் சானியா மிர்ஸாவும், சுனிதா ராவும், ஷார்ட்ஸ், பிராக்டிஸ் ஜாக்கெட்டில் நடந்து வந்தனர். இது சர்ச்சையை எழுப்பி விட்டது.
இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலையில் வராமல் இப்படியாக கேஷுவலாக வருவது என்று பேச்சு கிளம்பியது. இந்த நிலையில் இதுகுறித்து சுரேஷ் கல்மாடி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய குழுவினரின் பொறுப்பாளரான முருகனிடம், தாங்களும் சேலையில் வருவதாகவே சானியாவும், சுனிதா ராவும் தெரிவித்தனர். ஆனால் சேலை மாற்றிக் கொள்வதற்கு போதிய நேரம் இல்லாததால் சேலையில் வர முடியாத நிலையில் இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
அப்போதுதான் இருவரும் நீண்ட நேர பயிற்சிக்குப் பின்னர் திரும்பியிருந்தனர். எனவே வேகம் வேகமாக சேலை கட்டிக் கொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை. இதனால்தான் பயிற்சியின்போது போட்டிருந்த உடையுடன் நடந்து வந்தனர்.
அவர்களை அப்படியே விடலாமா அல்லது அணிவகுப்பில் கலந்து கொள்ளாமல் நிறுத்தி வைக்கலாமா என்று முருகன் யோசித்தார். ஆனால் இருவரும் தாங்களும் அணிவகுப்பில் கலந்து கொள்ள விரும்புவதாக தெரிவிக்கவே அவர்களை சாதாரண உடையில் செல்ல முருகன் அனுமதித்தார்.
அவர்கள் நீண்ட நேரம் பயிற்சி எடுத்தது நல்ல விஷயம்தான். அதை முடித்துக் கொண்டு அணிவகுப்பிலும் பங்கேற்க அவர்கள் காட்டிய ஆர்வமும் பாராட்டுக்குரியது.
ஆனால் அவர்கள் சேலையில் இல்லாமல் இருந்ததால் அனுப்பலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டு பின்னர் அவர்களை அனுமதித்துள்ளார் முருகன்.
அனைத்து வீராங்கனைகளுக்கும் தேவையான சேலைகளை நாங்கள் ஸ்டாக் வைத்திருந்தோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி நடந்து விட்டது என்று கூறியுள்ளார் கல்மாடி.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications