வீனஸிடம் சானியா போராடி தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸுடன் மோதிய இந்தியாவின் சானியா மிர்ஸா, கடுமையாக போராடித் தோல்வியைத் தழுவினார்.
உலகத் தர வரிசைப் பட்டியலில் எட்டாவது நிலையில் இருக்கும் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை, 3வது சுற்று ஆட்டத்தில் சானியா நேற்று சந்தித்தார்.
படு விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சானியா அபாரமாக ஆடி வீனஸுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். கடுமையாக நடந்த இந்தப் போட்டியில், 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீனஸ் வெற்றி பெற்றார்.
முதல் செட்டில், ஒவ்வொரு ஷாட்டிலும், வீனஸுக்கு கடும் சவாலைக் கொடுத்தார் சானியா. இதனால் அந்த செட் டை பிரேக்கருக்குப் போனது. டை பிரேக்கரில் வீனஸ் சிறப்பாக ஆடி செட்டை தன் வசப்படுத்தினார்.
டை பிரேக்கரின்போது சானியா நிறைய தவறுகளைச் செய்ததால், செட் அவரது பிடியிலிருந்து நழுவியது.
2வது செட்டிலும் சானியா 16 தவறுகளைச் செய்தார். இதனால் 2வது செட்டைக் கைப்பற்றி போட்டியை வென்றார் வீனஸ்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications