லெக்ஸிங்டன் சாலஞ்சர்-பட்டம் வென்ற சானியா

அமெரிக்காவில் நடந்து வந்த லெக்ஸிங்டன் சாலஞ்சர் போட்டியில் பங்கேற்ற சானியா இறுதிப் போட்டியில், முதல் நிலை வீராங்கனையான பிரான்ஸின் ஜூலி காயினை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார் சானியா.
இந்தப் போட்டித் தொடரில் 2வது நிலை வீராங்கனையாக கலந்து கொண்டார் சானியா. அவர் பங்கேற்கும் 2வது சாலஞ்சர் தொடர் இது.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில், பிரான்ஸின் காயினை 7-6 (5), 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டத்தை வென்றார் சானியா.
இந்தப் போட்டியில் வென்ற சானியாவுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தியும் காத்திருந்தது. அது தர வரிசைப் பட்டியலில் அவருக்கு 3 இடம் கூடுதலாக கிடைத்து 80வது ரேங்குக்கு தற்போது முன்னேறியுள்ளார்.
அதேசமயம் இரட்டையர் பிரிவில் 10 இடங்கள் இறங்கி 49வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் சானியா.
திருமணம் நிச்சயமானதற்குப் பின்னர் சானியா வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது விசேஷமாக குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications