ஒலிம்பிக் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்றார் அமெரிக்காவின் செரீனா

டென்னிஸ் இறுதி சுற்றில் செரீனா வில்லியம்ஸூம் ஷரபோவாவும் மோதினர். செரீனாவின் அதிரடி ஆட்டத்தின் முன்பு ஷரபோவாவின் ஆட்டம் எடுபடவில்லை. முதல் செட்டில் தனது 3 சர்வீஸ்களையும் தன்வசமாக்கியதோடு, ஷரபோவாவின் 3 சர்வீஸ்களையும் முறியடித்து முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார் செரீனா.
2-வது செட்டிலும் செரீனாவின் அபாரம் ஓய்ந்துவிடவில்லை. 2-வது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஷரபோவாவை வீழ்த்தினார். செரீனா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரட்டையர் பிரிவில் இரு முறை தங்கம் வென்றுள்ளார். இதேபோல் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் 14 பட்டங்களை வென்றுள்ளார்.
வெண்கலம்
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மரியா கிரிலென்கோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்..


Click it and Unblock the Notifications