ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: மகேஷ் பூபதி ஜோடியை வீழ்த்திய பயஸ் ஜோடி சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் தொடரில் நேற்று ஆண்களுக்கான இரட்டையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடி, இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடியை எதிர்கொண்டது.
ஏற்கனவே லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி இடையே அதிருப்தி நிலவிய நிலையில், இப்போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய ஜோடியான மகேஷ் பூபதி, போப்பண்ணா ஜோடி முதல் செட்டில் சிறப்பாக ஆடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆனால் 2வது செட்டில் அதிரடியாக ஆடிய லியாண்டர் பயஸ் ஜோடி 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றியது. 3வது செட்டில் இரு ஜோடிகளும் ஆக்ரோஷமாக ஆடியது. டை பிரேக்கர் வரை சென்ற 3வது செட்டை 10-5 என்ற கணக்கில், பயஸ் ஜோடி கைப்பற்றியது. இதன்மூலம் லியாண்டர் பயஸ்-ராடக் ஸ்டெபனக் ஜோடி 7-6, 6-3, 10-5 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இது குறித்து லியாண்டர் பயஸ் கூறியதாவது,
இன்றைய போட்டியில் மகேஷ் பூபதி, போப்பண்ணா ஜோடி சிறப்பான துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன்பிறகு அவர்கள் சற்று சோர்ந்து காணப்பட்டதால், நாங்கள் வெற்றி பெற்றோம். இந்திய வீரர்களான எங்கள் 3 பேருக்கும் இன்றைய ஆட்டம் பெரும் சவால் நிறைந்ததாக இருந்தது என்றார்.


Click it and Unblock the Notifications