காதலரைப் பிரிந்து விட்டேன்... ஷரபோவா

டென்னிஸ் உலகில் வலம் வரும் சக்தி வாய்ந்த வீராங்கனைகளில் மரியாவும் ஒருவர். கவர்ச்சிப் புயலான இவரும், ஸ்லோவேனியாவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் சாஷா வுஜாசிக்கும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நெருக்கத்தின் காரணமாக மரியா கர்ப்பமாகி விட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மரியா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் மரியாவும், சாஷாவும் பிரிந்து விட்டனராம். இதை மரியாவும் மறுக்கவில்லை.
நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடி வரும் மரியா, வெள்ளிக்கிழமை நடந்த போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, எனக்கும் சாஷாவுக்கும் இடையிலான உறவு இப்போது இல்லை, அது முடிந்து போய் விட்டது.
இருவருக்கும் அந்த காதல் காலம் மிகவும் இனிமையாக இருந்தது. ஆனால் எங்களது தொழில்முறை அலைச்சல் மற்றும் கமிட்மென்ட்கள் காரணமாக இதைத் தொடர முடியாத நிலை. மேலும் அவர் தற்போது துருக்கிக்கு இடம் பெயர்ந்து போய் விட்டார். எனவேதான் காதலை முடித்துக் கொண்டு விட்டோம் என்றார் மரியா.
மரியாவின் அடுத்த 'நெக்ஸ்ட்'?


Click it and Unblock the Notifications