பிரெஞ்ச் ஓபன்:ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சுலோவேக்கியாவின் டாமினிகா சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
இதில் மோசமாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை ஒரு புள்ளிகள் கூட கைப்பற்றாமல் 6-0 என பறிகொடுத்தார். அடுத்த செட்டிலாவது சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதை 6-2 என ஷரபோவா இழந்தார்.
இறுதியில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். சிபுல்கோவா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில் சபினா...
மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் டினரா சபினா 1-6, 6-4, 6-2 என பெலராசின் விக்டோரியா அசரெங்கோவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் சிலியின் பெர்ணான்டோ கோன்செலஸ் 6-3, 3-6, 6-0, 6-4 என இங்கிலாந்தின் ஆன்டி முரேவையும், சுவீடனின் ராபின் சொடர்லிங் 6-1, 6-3, 6-1 என ரஷ்யாவின் நிகோலே டேவிடெங்கோவையும் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications