டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவிற்கு நவம்பரில் டும்,டும்,டும்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா(24). டென்னிஸ் உலகின் 2வது சிறந்த வீராங்கனையாக உள்ள ஷரபோவா, கடந்த 2009ம் ஆண்டு முதல் பிரபல கூடைப் பந்துவீரரான சாஷா வுஜாசிக்கை காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஷரபோவா, வுஜாசிக் திருமணம் வரும் நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்திருந்தனர். ஆனால் ஆகஸ்ட் மாதம் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் திருமண தேதி நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் மிகுந்த துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இரு தரப்பைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் அழைக்கப்பட உள்ளனர்.
Story first published: Wednesday, March 28, 2012, 7:41 [IST]
Other articles published on Mar 28, 2012


Click it and Unblock the Notifications