Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்மியைப் பிரிந்தார் ஷரபோவா - ஒரே போட்டியில் முடிவுக்கு வந்தது குரு, சிஷ்யை உறவு

சின்சினாட்டி: நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் உலகின் முதல் நிலை வீராங்கனையுமான மரியா ஷரபோவா தனது புதிய பயிற்சியாளரான ஜிம்மி கானர்ஸை விட்டுப் பிரிந்து விட்டார்.

இவர்களது குரு - சிஷ்யை உறவு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை மரியாவின் ஏஜென்ட் மாக்ஸ் ஏசன்பெட் அறிவித்துள்ளார்.

எட்டு முறை சாம்பியன் கானர்ஸ்

எட்டு முறை சாம்பியன் கானர்ஸ்

ஜிம்மி கானர்ஸ் 8 முறை முக்கியப் பட்டங்களை வென்ற முன்னாள் பிரபல வீரர்.

கடந்த மாதம்தான் பயிற்சியாளரானார்

கடந்த மாதம்தான் பயிற்சியாளரானார்

அவரை கடந்த மாதம்தான் தனது பயிற்சியாளராக நியமித்தார் ஷரபோவா. அதற்கு முன்பு தாமஸ் ஹோக்ஸ்டெட் 18 மாதங்களாக ஷரபோவாவின் பயிற்சியாளராக இருந்தார்.

சின்சினாட்டி போட்டியுடன் முறிவு

சின்சினாட்டி போட்டியுடன் முறிவு

இந்த நிலையில் சின்சினாட்டி தொடரில் கலந்து கொண்ட ஷரபோவா ஒரே போட்டியுடன் கானர்ஸிடமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வி

அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வி

சின்சினாட்டி தொடரில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோவன் ஸ்டீபன்ஸிடம் தோற்றுப் போனார் ஷரோபவா. இதையடுத்து கானர்ஸிடமிருந்து விலகி விட்டார்.

புளோரிடாவில் ஷரபோவா.. கலிபோர்னியாவில் கானர்ஸ்

புளோரிடாவில் ஷரபோவா.. கலிபோர்னியாவில் கானர்ஸ்

தற்போது புளோரிடாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஷரோபவா. அதேசமயம், ஜிம்மி கானர்ஸ், கலிபோர்னியாவில் உள்ள தனது மையத்துக்குத் திரும்பி விட்டார்.

நாய்களுடன் சந்தோஷமாக இருக்கிறேன்

நாய்களுடன் சந்தோஷமாக இருக்கிறேன்

இதுகுறித்து கானர்ஸ் வெளியிட்ட டுவிட்டர் தகவலில், குடும்பத்துடன், நாய்களுடன், சமையல் செய்தபடி ஜாலியாக இருக்கிறேன். கூடவே வோத்காவும் இருக்கிறது... குடிக்க என்று குசும்பாக கூறியுள்ளார்.

Story first published: Saturday, August 17, 2013, 13:13 [IST]
Other articles published on Aug 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+