Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிட்டாய் விற்க யு.எஸ். ஓபனில் ஷுகர்போவாவாக மாற விரும் ஷரபோவா

நியூயார்க்: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தனது பெயரை அமெரிக்க ஓபன் போட்டிகளின்போது மட்டும் மரியா ஷுகர்போவா என்று வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

உலகின் பணக்கார வீராங்கனை ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவர் ஷுகர்போவா என்ற இனிப்பு வகையை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்து வருகிறார். ரூ.2.98 கோடிக்கும் அதிகமாக செலவழித்து துவங்கப்பட்ட இந்த வியாபாரத்திற்கு வரும் 26ம் தேதி துவங்கி செப்டம்பர் 9ம் தேதி வரை நடக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போது விளம்பரம் தேடவிருக்கிறார் ஷரபோவா.

Maria Sharapova

அதற்காக அவர் போட்டிகளின்போது மட்டும் தனது பெயரை மரியா ஷுகர்போவா என்று வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு கிராண்ட் ஸ்லாம் குழு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளித்தால் அவர் ஷுகர்போவா என்ற பெயரை பயன்படுத்தலாம். அவர் இந்த போட்டிகளின்போது ஷுகர்போவா இனிப்பு வகையின் லோகோவான சிவப்பு நிற உதடுகள் படம்போட்ட ஆடையை அணிந்து விளையாடவிருக்கிறார்.

கடந்த ஆண்டு மட்டும் 2 மில்லியன் பாக்கெட் ஷுகர்போவா இனிப்புகள் விற்பனையாகியுள்ளன.

Story first published: Wednesday, August 21, 2013, 6:47 [IST]
Other articles published on Aug 21, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+