விம்பிள்டன் பைனலில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டனில் நடக்கிறது. நேற்று பெண்கள் ஒற்றையரில் நடந்த முதல் அரையிறுதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் எலினா டெமன்டிவாவை எதிர் கொண்டார்.
இதில் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய டெமன்டிவா 7-6 என வென்றார். இதையடுத்து சுதாரித்து கொண்ட செரினா அசுரவேக சர்வீஸ்களால் மிரட்டினார். அடுத்த இரண்டு செட்டுகளையும் கடின போராட்டத்துக்கு பின் கைப்பற்றினார். இறுதியில் 6-7, 7-5, 8-6 என்ற செட்களில் வென்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினாவை சந்தித்தார். இதில் வீனஸ் 6-1, 6-0 என எளிதாக வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.
நாளை நடக்கும் பைனலில் வீனஸ் தனது சகோதரி செரினாவை சந்திக்கிறார். இது இவர்கள் மோதும் 8வது கிராண்ட்ஸ்லாம் பைனாலாகும். இதில் செரினா 5 முறையும், வீனஸ் 2 முறையும் வென்றுள்ளனர்.
இதுவரை செரினா 10, வீனஸ் 7கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளனர்.
அரையிறுதியில் பயஸ் ஜோடி...
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேவின் காரா பிளாக் ஜோடி, பிரேசிலின் ஆன்ட்ரி சா, ஜப்பானின் அய் சுகியாமா ஜோடியை எதிர்கொண்டது. இதில் பயஸ் ஜோடி 6-3, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications