Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டனில் தோற்றுப் போன லிசிக்கி.. விரட்டியடித்து வென்றார் பர்டோலி

லண்டன்: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை பிரான்சின் மரியான் பர்டோலி 6-1,6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று தட்டிச்சென்று விட்டார். பட்டம்வெல்வார் என்று அறியப்பட்ட ஜெர்மனியின் சபீன் லிசிக்கி அதிர்ச்சித் தோல்வியுற்றார்.

செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் லிசிக்கி. ஆனால் இறுதிப் போட்டியில் மண்ணைக் கவ்வினார் லிசிக்கி.

முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள பர்டோலி, விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பிரான்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

முதல் செட்டிலேயே லிசிக்கி வீழ்ச்சி

முதல் செட்டிலேயே லிசிக்கி வீழ்ச்சி

இறுதிப் போட்டியில் லிசிக்கி முதல் செட்டிலேயே வீழ்ந்தார். 6-1 என்ற கணக்கில் அசாத்திய பலத்துடன் தனது வெற்றி பயணத்தை தொடங்கினார் பர்டோலி.

நிறைய தவறுகள்

நிறைய தவறுகள்

தனது ஆட்டத்தில் நிறைய தவறுகளைச் செய்தார் லிசிக்கி. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் பர்டோலி.

லிசிக்கியின் 25 தவறுகள்

லிசிக்கியின் 25 தவறுகள்

இந்தப் போட்டியில் லிசிக்கி மொத்தம் 25 தவறுகளைச் செய்தார். எல்லாம் அவரது கவனக்குறைவுதான். இதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணமாகி விட்டது.

81 நிமிடங்களில் வெற்றி

81 நிமிடங்களில் வெற்றி

81 நிமிடங்களிலேயே லிசிக்கியை வீழ்த்தி பட்டத்தை வென்றார் பர்டோலி.

கண்ணீரில் லிசிக்கி

கண்ணீரில் லிசிக்கி

தோல்வியைத் தாங்க முடியாமல் லிசிக்கி மைதானத்திலேயே அழுது விட்டார்.

கனவு நனவானது

கனவு நனவானது

போட்டியின் முடிவில் பர்டோலி கூறுகையில், என்னால் இதை நம்ப முடியவில்லை. எனது கனவு நனவாகியுள்ளது. சிறு வயது முதலே இந்தப் பட்டத்தை நினைத்துக் கனவு கண்டு வந்தேன் என்றார்.

2007ல் தோற்றவர்

2007ல் தோற்றவர்

2007ம் ஆண்டுநடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பர்டோலியை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது தனது கனவை எட்டி விட்டார் பர்டோலி.

47வது போட்டியில் முதல் பட்டம்

47வது போட்டியில் முதல் பட்டம்

இதுவரை 47 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆடியுள்ள பர்டோலிக்கு இது முதல் பட்டமாகும்.

விளையாடியதிலும் சாதனை

விளையாடியதிலும் சாதனை

இதுவும் கூட ஒரு வகையில் சாதனைதான். காரணம், இதற்கு முன்பு 45 போட்டிகளில் விளையாடி அதன் பிறகுதான் ஜானா நவோத்னா விம்பிள்டன் பட்டத்தை வென்றார். தற்போது அதைத் தாண்டியுள்ளார்.

5வது வயதான வீராங்கனை

5வது வயதான வீராங்கனை

விம்பிள்டன் பட்டத்தை அதிக வயதில் வென்ற 5வது வீராங்கனை பர்டோலி. அவருக்கு தற்போது 28 வயதாகிறது.

Story first published: Sunday, July 7, 2013, 14:28 [IST]
Other articles published on Jul 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+