Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன்: முதல் சுற்றில் 135வது இடத்தில் உள்ளவரிடம் தோற்ற நாடால்

Wimbledon: Nadal Loses to 135th-ranked player in the first round
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ரபேல் நாடால் முதல் சுற்றிலேயே 135வது இடத்தில் உள்ள ஸ்டீவ் டார்சிஸ் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நாடால் வென்றார். அதுவும் 8வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் விளையாடிய நாடாலை 135வது இடத்தில் இருக்கும் ஸ்டீவ் டார்சிஸ் என்பவர் நேர் செட்களில் தோற்கடித்தார்.

2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டத்தை பெற்ற நாடால் கடந்த ஆண்டு அதே போட்டியில் 2வது சுற்றில் செக் குடியரசின் லூகாஸ் ரொசோலிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அதன் பிறகு காலில் காயம் ஏற்பட்டு 7 மாதங்கள் அவதிப்பட்டார்.

தற்போது நாடால் விம்பிள்டன் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளது ராஜர் பெடரர் 8வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றிலேயே நாடால் தோல்வி அடைந்து வெளியேறியது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 25, 2013, 15:36 [IST]
Other articles published on Jun 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+