விம்பிள்டன் கலப்பு இரட்டையர்: காலிறுதிக்கு முன்னேறியது லியாண்டர் பயஸ், வெஸ்னினா ஜோடி

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோடியாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதி போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, மேக்ஸ் மிரினி மற்றும் விக்டோரியா அசரின்கா ஜோடியை எதிர்கொண்டது. இதில் பயஸ், எலினா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றது.
இதையடுத்து காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பயஸ்-எலினா ஜோடி, ஆஸ்திரேலியாவின் பால் ஹன்லி, ரஷ்யாவின் அலா குட்ரைவ்சிவ் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.
மற்றொரு தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் போபண்ணா, ஜி ஷிங் ஜோடி அமெரிக்காவின் மைக் பிரையன், லிசா ரேமாண்ட் ஜோடியிடம் 2-5, 5-7 செட் கணக்கில் தோல்வியை தழுவி, தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம் விம்பிள்டன் தொடரில் இந்திய தரப்பில் லியாண்டர் பயஸ் மட்டுமே நீடிக்கிறார்.
முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் உடன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோடி சேர சானியா மிஸ்ரா அதிருப்தி தெரிவித்தார். மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் பயஸ் உடன் ஜோடி சேர்வதில் சிக்கல் எழுந்தது.
இந்த நிலையில் ரஷ்யா வீராங்கனை எலினா வெஸ்னினா உடன் ஜோடி சேர்ந்துள்ள லியாண்டர் பயஸ், விம்பிள்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications