Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் வீராங்கனை மீது காதல் பைத்தியம்! சிறைக்கு அனுப்பி வைத்த தந்தை.. நீதிபதி அளித்த வினோத தண்டனை

லண்டன்: பிரபல டென்னிஸ் வீராங்கனை எமா ரடுகானுவை பைத்தியம் போல் காதலித்த 35 வயது இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த 19 வயதான ரடுகானு, கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

அதன் பிறகு ரடுகானு உலக பிரபலம் அடைந்தார். அழகிய தோற்றம் உடைய ரடுகானு பல இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

23 கிலோ மீட்டர்

23 கிலோ மீட்டர்

இந்த நிலையில் ரடுகானுவை 35 வயது லாரி ஓட்டுனர் அம்ரித் மகர், கடந்த 8 மாதமாக உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். ரடுகானுவை பார்ப்பதற்காக சுமார் 23 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ள அம்ரித், அவருக்கு லவ் டார்சர் கொடுத்துள்ளார். காதல் அட்டை, ரோஜா பூ, விதவிதமான பூங்கொத்து என தினமும் வீட்டு முன்பு வைத்துள்ளார் இந்த அந்நியன் ரெமோ.

நினைவு பொருள்

நினைவு பொருள்

கிறிஸ்துமஸ் அன்று அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்த இந்த காதல் ரெமோ, ரடுகானு வீட்டின் முன்பு இருந்த மரத்தில் விளக்குகளால் அலங்கரித்துள்ளார். மேலும், காதல் தேவைதையின் நினைவு பொருளாக ரடுகானுவின் காலணிக்கு பதில், அவரது தந்தை காலணியை எடுத்து கொண்டு ஓடியுள்ளார் அந்த காதல் பைத்தியம்.

போலீசார் கைது

போலீசார் கைது

ரடுகானுவும், அவரது குடும்பமும் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ரடுகானு வீட்டின் முன்பு அசுத்தும் செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதே போன்று தகாத செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரடுகானுவின் தந்தை, அந்த இளைஞர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது போலீசாரிடம் கூறவிட்டார்.

வினோத தண்டனை

வினோத தண்டனை

இதனையடுத்து அந்த இளைஞரை மாமியார் வீட்டுக்கு லண்டன் போலீசார் அழைத்து சென்றனர். இளைஞரின் அத்துமீறல் தொடர்பான ஆதாரங்கள் வழங்கப்பட்டதை அடுத்து அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். மேலும், முதியோர் விடுதியில் ஒன்றரை ஆண்டு தினமும் சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Story first published: Wednesday, February 23, 2022, 19:45 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+