Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடாலை வீழ்த்தி சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த இரண்டு வார காலமாக நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலும், 8-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும் நேற்று மோதினர்.

நடால் தான் ஆதிக்கம் செலுத்துவார் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பு. ஆனால் களத்தில் அப்படியே நேர்மாறாக நடந்தது. தொடக்கத்தில் இருந்தே நடாலுக்கு 'தண்ணி' காட்டிய வாவ்ரிங்கா ஆக்ரோஷமான ஷாட்டுகளை அடித்ததுடன், வலை அருகே ஓடி வந்து பந்தை லாவகமாக திருப்புவதிலும், பிரமாதமாக செயல்பட்டார்.

நடாலுக்கு அதிர்ச்சி

நடாலுக்கு அதிர்ச்சி

நடாலின் 4-வது மற்றும் 6-வது கேமில் சர்வீசை முறியடித்து அதிர்ச்சி அளித்த அவர் முதல் செட்டை எளிதில் தன்வசப்படுத்தினார். வாவ்ரிங்காவின் வாழ்க்கையில் நடாலுக்கு எதிராக ஒரு செட்டை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

முதுகுவலி

முதுகுவலி

ரபெல் நடால் முதுகுவலியால் அவதிப்பட்டார். 2-வது செட்டின் போது மூன்று முறை சிகிச்சை பெற்றார். இதனால் அவரால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எல்லா வகையிலும் தடுமாறினார். அவரது முகம் உற்சாகமின்றி காணப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வாவ்ரிங்கா 2-வது செட்டையும் வசப்படுத்தினார்.

போராடிய நடால்

போராடிய நடால்

காயத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் நடால் பாதியிலேயே விலகும் முடிவுக்கு செல்லவில்லை. கடைசிவரை போராடுவது என்று முடிவெடுத்தார். 3-வது செட்டில் ஓரளவு மீண்ட அவர் 3-0 என்று முன்னிலை பெற்று, அதன் மூலம் அந்த செட்டை கைப்பற்றினார்.

வாவ்ரிங்கா சாம்பியன்

வாவ்ரிங்கா சாம்பியன்

இதையடுத்து ஆட்டம் 4-வது செட்டுக்குள் நுழைந்தது. இதில் 6-வது கேமில் நடாலின் சர்வீசை முறியடித்த வாவ்ரிங்கா, சிறிது நேரத்தில் வெற்றியையும் தன்னகத்தே இணைத்துக் கொண்டார். 2 மணி 21 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் வாவ்ரிங்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைப் பெற்றார்.

9 ஆண்டுகால காத்திருப்பு ரூ14.5 கோடி பரிசு

9 ஆண்டுகால காத்திருப்பு ரூ14.5 கோடி பரிசு

2005-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் 28 வயதான வாவ்ரிங்காவுக்கு, முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற 9 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. சாம்பியன் ஆன அவர் ரூ.14.5 கோடி பரிசுத்தொகையை பெற்றார்.

பாராட்டு

பாராட்டு

நடால் வெற்றி பெற்றிருந்தால், பீட் சாம்ப்ராசின் 14 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்திருப்பார். அவரது சாதனை பயணத்திற்கு வாவ்ரிங்கா அணைபோட்டு விட்டார். 2-வது இடம் பிடித்த நடாலுக்கு ரூ.7.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தோல்வி சோகத்தில் நடாலின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

3வது இடம்

3வது இடம்

ஆஸ்திரேலிய ஓபனை வென்ற வாவ்ரிங்காவுக்கு 2000 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. இதன் மூலம் அவர் இன்று வெளியிடப்படும் புதிய தரவரிசை பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறுகிறார். இது அவரது சிறந்த தரநிலையாகும். அத்துடன் முதல் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டின் நம்பர் ஒன் வீரர் என்ற அந்தஸ்து அவருக்கு கிடைக்கப் போகிறது. முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு தள்ளப்படுகிறார்.

3வது சுவிட்சர்லாந்துக்காரர்

3வது சுவிட்சர்லாந்துக்காரர்

17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரோஜர் பெடரர், 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற 3-வது சுவிட்சர்லாந்து நாட்டவர் வாவ்ரிங்கா ஆவார்.

Story first published: Monday, January 27, 2014, 11:35 [IST]
Other articles published on Jan 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+