சுமித் நாகல் திறமையை கண்ட அந்த நட்சத்திரம்..! அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய திருப்பம்..! #USOpen
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க ஓபனில், ரோஜர் பெடரரையே மிரள வைத்த இந்தியாவின் இளம் நாயகன் சுமித் நாகலின் ஆட்டத்திறனை முதலில் அடையாளம் கண்ட டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நம்பர் 3 வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 190வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகலை எதிர் கொண்டார்.
துவக்கத்தில் அசத்திய நாகல் முதல் செட்டை 6க்கு 4 என வென்றார். பின் சுதாரித்த பெடரர், 2வது செட்டை 6க்கு 1 என வென்று பதிலடி கொடுத்தார். 3வது செட்டையும் 6க்கு 2 என பெடரர் எளிதாக தன்வசப்படுத்தினார். 4வது செட்டிலும் அசத்திய பெடரர், 6க்கு 4 என கைப்பற்றி வென்றார்.

சாதனை
ரோஜர் பெடரருடன் அவர் ஆடிய ஆட்டம், உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். காரணம், 20 முறை கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் வெற்றி பெற்றுள்ள ரோஜர் பெடரை ஒரு செட்டில் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார் சுமித் நாகல். போட்டியை பெடரர் வென்றாலும், அவருக்கு சுமித் நாகல் பெரும் சவாலாக இருந்தார்.

குவியும் பாராட்டுகள்
ஆர்தர் ஆஷே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெடரரின் வெற்றி சுலபம் என்ற அனைவரும் எண்ணமும் தொடக்கத்திலேயே சுக்கு நூறாகி போனது. இறுதியில் 4வது சுற்று இறுதிவரை விறுவிறுவிப்பாக ஆட்டம் போனது. பெடரர் போட்டியை கைப்பற்றினாலும், சுலபமாக வெற்றி பெற விடாமல் பெரும் சவாலாய் இருந்ததற்காகவும் சுமித் நாகலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விம்பிள்டன் இளையோர்
22 வயதான சுமித் நாகல் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் 190வது இடத்தில் உள்ளார். அவர் டெல்லி என்சிஆர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். நாகல் இதற்கு முன்பு 2015ம் ஆண்டு விம்பிள்டன் இளையோர் பட்டத்தை வென்றார்.

மகேஷ் பூபதி அகாடமி
நாகலின் ஆட்டத்திறனை முதலில் அடையாளம் கண்டவர் பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி. நாகலை தமது டென்னிஸ் அகாடமியில் அழைத்து, அவருக்கு கடுமையான பயிற்சிகளை அளித்தார். வெற்றி குறித்து பேசிய மகேஷ் பூபதி, மிகச் சிறந்த வீரருக்கு எதிராக ஆக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

ஜெர்மனியில் பயிற்சி
இந்த பயிற்சிக்கு பிறகு ஜெர்மனியில் சில நாட்கள் நாகல் சிறப்பு பயிற்சி மேற்கொண்டார். இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்றவர் பெடரர். 2003-ஆம் ஆண்டு முதல் எந்த கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் முதல் சுற்றில் தோல்வி அடைந்ததில்லை. அவரையே ஒரு கணம் ஆட்டம் காண வைத்தவர் என்பதால், நாட்டின் பல்வேறு துறை வல்லுநர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications